Saturday, September 1, 2018

புதுமைப் பள்ளி விருது

பென்னகர் அரசுப் பள்ளிக்கு விருது


மாணவர் சேர்க்கை, கற்றல் திறன், புதுமையான கற்பித்தல் முறை,அடிப்படை வசதிகள், பள்ளி மேலாண்மை குழுவுடன் ஒருங்கிணைந்து
பள்ளி மற்றும் மாணவர்களின் கல்விசார் வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்பட்டதை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.


புதுமைப் பள்ளி விருது மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என ஒவ்வொரு பள்ளிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

பென்னகர் அரசுப் பள்ளிக்கு 2017-2018ஆம் கல்வி ஆண்டிற்கான புதுமைப் பள்ளி விருதை 09.07.2018 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.நா.முனுசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். விழாவில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் கோ.கிருஷ்ணன், பென்னகர் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செ.தண்டபாணி, கணித பட்டதாரி ஆசிரியர் பா.இராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பதிவு நாள் : 01.09.2018(சனிக்கிழமை) 7:00 pm.

No comments:

Post a Comment

பெருந்தலைவர் காமராசர் விருது

பெருந்தலைவர்காமராசர்விருது செஞ்சி வட்டம் பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2016 – 2017ஆம் கல்வியாண்டில்10ஆம் வகுப்பு பயின்ற மா...