Saturday, September 1, 2018

பெருந்தலைவர் காமராசர் விருது


பெருந்தலைவர்காமராசர்விருது



செஞ்சி வட்டம் பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2016 – 2017ஆம் கல்வியாண்டில்10ஆம் வகுப்பு பயின்ற மாணவி தி.அன்பரசி கல்வி செயல்பாடு உள்ளிட்ட தனித்திறன்களில் சிறந்து விளங்கியதால் பெருந்தலைவர் ”காமராசர்விருது” 06.06.2018 அன்று வழங்கப்பட்டது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட அரங்கில் நடை பெற்ற விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.இல.சுப்ரமணியன் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் விருதும் ரொக்கம் ரூ.10,000க்கான காசோலையையும் வழங்கி பாராட்டினார். விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் திரு.கோ.கிருஷ்ணன், பென்னகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.நா.முனுசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.கு.அசோக்குமார் ஆகியோர் உடனிருந்து பாராட்டினர்.
பெருந்தலைவர் காமராசர் விருது ஒரு கல்வி மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கியமைக்காக தமிழக அரசிற்கும், மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவர்களுக்கும், பள்ளியின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Post Date : 01.09.2018 saturday 7:30pm



No comments:

Post a Comment

பெருந்தலைவர் காமராசர் விருது

பெருந்தலைவர்காமராசர்விருது செஞ்சி வட்டம் பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2016 – 2017ஆம் கல்வியாண்டில்10ஆம் வகுப்பு பயின்ற மா...